ரூ.32 லட்சத்துக்கு நீட் வினாத் தாள் விற்பனை - மாணவர் பகீர் வாக்குமூலம்
நீட் வினாத் தாள் ரூ.32 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் முறைக்கேடு
நீட் நுழைவுத்தேர்வு கடந்த மாதம் 5-ந் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த 4-ந் தேதி வெளியாகின. தொடர்ந்து, இந்த முறை 67 பேர் முழு மதிப்பெண் பெற்றது, 1500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கியது.
பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது என பல சர்ச்சைகள் வெடித்தது. இதற்கிடையில், கோத்ராவில் உள்ள பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது.
ரூ.2 கோடிக்கு மேல் கைமாறியுள்ளது. மேலும், தீவிர விசாரணையில் சுமார் 35 மாணவ-மாணவிகளுக்கு தேர்வுக்கு முன்தினம் வினாத்தாள் மற்றும் விடைகள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்தது. தொடர் போலீஸார் தேடுதலில் பாட்னாவில் ஒரு காரில் சுற்றித் திரிந்த இடைத்தரகர்கள் சிக்கந்தர் யாதவ், அகிலேஷ் குமார், பிட்டு சிங் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
வினாத் தாள் விற்பனை
நீட் தேர்வு நடைபெற்ற பிறகு சில மாணவர்களையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களில் அனுராக் யாதவ் என்பவர், எனது உறவினர் சிக்கந்தர் யாதவ் (இடைத்தரகர்), பாட்னா அருகேயுள்ள தானாபூர் நகராட்சியில் இளநிலை பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.
நீட் தேர்வுக்கு ஒருநாள் முன்னதாக அவர் என்னிடம் வினாத்தாளை அளித்து விடைகளை மனப்பாடம் செய்ய அறிவுறுத்தினார். எனது உறவினர் சிக்கந்தர் யாதவும் அவரது நண்பர்களும் ஒரு வினாத்தாளை ரூ.32 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை பல்வேறு மாணவர்களுக்கு விற்பனை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸார், நீட் வினாத்தாள் கசிவில் சில அரசியல் தலைவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.