இனி UG படிப்பை ஒரு வருடம் முன்னரே முடிக்கலாம் - யுஜிசியின் புதிய நடைமுறை

Chennai India Education University Grants Commission Graduates
By Karthikraja Nov 14, 2024 01:45 PM GMT
Karthikraja

Karthikraja

in கல்வி
Report

இளங்கலை படிப்பை ஒரு வருடத்திற்கு முன்னரே முடித்துவிடலாம் என்ற நடைமுறை வர உள்ளதாக யுஜிசி தலைவர் தெரிவித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கை

தேசிய கல்விக் கொள்கை - 2020ஐ நடைமுறைப்படுத்துவது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் தென்மண்டல அளவில் தன்னாட்சி கல்லூரிகளுக்கான ஒருநாள் கருத்தரங்கு சென்னை ஐஐடியில் இன்று(14.11.2024) நடைபெற்றது. 

ugc chairman Jagadesh Kumar

இந்த கருத்தரங்கை யுஜிசி தலைவர் எம்.ஜெகதிஷ் குமார் தொடங்கிவைத்தார். இதில் சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, தன்னாட்சிக் கல்லூரிகளின் முதல்வர்கள், மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். 

பட்டப்படிப்பு படித்திருந்தால் மாதம் ரூ.10,000 - முதல்வர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு

பட்டப்படிப்பு படித்திருந்தால் மாதம் ரூ.10,000 - முதல்வர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு

தாய்மொழி கல்வி

இந்த நிகழ்விற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார், "இந்தியாவில் இயங்கி வரும் வலிமையான, தரமான உயர்கல்வி நிறுவனங்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்கு பெருமளவு உறுதுணையாக இருக்கின்றன. இன்றைய தினம் நம் நாடு தொழில்நுட்ப ரீதியாக மிக வேகமாக வளர்ந்து வருதற்கு இங்குள்ள இளைஞர்களே காரணம்.

உயர்கல்வி என்று வரும்போது பெரும்பாலான மாணவர்களுக்கு ஆங்கில மொழி பிரச்சினை பெரும்தடையாக இருந்து வருகிறது. எனவே, அவர்களுக்கு தாய்மொழியில் உயர்கல்வி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். 

ugc chairman Jagadesh Kumar

உலகில் முன்னேறிய நாடுகளில் எல்லாம் தாய்மொழியில்தான் உயர்கல்வி வழங்கப்படுகிறது. ஆங்கிலத்தை தகவல் தொடர்புக்காக ஒரு மொழிப்பாடமாக படித்தால் போதும். அடிப்படைக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரையில் தாய் மாெழியில் வழங்கலாம்.

தொழில் அறிவுக்கு கிரெடிட்

மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனையும், சுயதொழில் ஆர்வத்தையும் மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு திறன் சார்ந்த கல்வி அளிக்கப்பட வேண்டும். வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங், எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளின் ஆராய்ச்சிகளிலும் நாம் சிறந்து விளங்க வேண்டியுள்ளது.

சில மாணவர்கள் ஏதேனும் ஒரு தொழிலில் சிறந்து விளங்குவார்கள். எனவே அவர்களின் தொழில் அறிவை அங்கீகரிக்கும் வகையில் அவர்களின் படிப்பில் தொழில் அறிவுக்கு குறிப்பிட்ட கிரெடிட் வழங்குவது என யுஜிசி கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இளங்கலை படிப்பு

இதே போல் இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறைக்கும், அதேபோல், படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்கள் கூடுதல் காலஅவகாசம் எடுத்துக்கொள்ளும் புதிய முறைக்கு யுஜிசி ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, மாணவர்கள் விரும்பினால் 4 ஆண்டு கால அல்லது 3 ஆண்டு கால இளங்கலை பட்டப்படிப்பை ஓராண்டு அல்லது 6 மாதங்களுக்கு முன்னரே படித்து முடித்துவிடலாம். அதேபோல், கற்றலில் சற்று பின்தங்கிய மாணவர்கள் தேவைப்பட்டால் 6 மாதங்கள் அல்லது ஓராண்டு கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளலாம். வரும் கல்வி ஆண்டு முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது" என பேசியுள்ளார்.