ஒலிம்பிக் ஓட்டப் பந்தய வீராங்கனை - பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன் - ஷாக் சம்பவம்!

World Paris 2024 Summer Olympics
By Swetha Sep 04, 2024 08:15 AM GMT
Report

ஒலிம்பிக் வீராங்கனை மீது காதலன் பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீராங்கனை 

உகாண்டா நாட்டை சேர்ந்தவர் ரெபேக்கா செப்டேகி. இவர் ஒலிம்பிக்ஸ் மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை ஆவார். அவர் மீது அவரது காதலன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒலிம்பிக் ஓட்டப் பந்தய வீராங்கனை - பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன் - ஷாக் சம்பவம்! | Uganda Olympic Athlete Was Set On Fire By Her Bf

75 சதவீத தீக்காயங்களுடன் கென்யாவில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார் ரெபேக்கா. கடைசியாக உகாண்டா சார்பில் பாரீஸ் ஒலிம்பிக்சில் கலந்துகொண்டு மாரத்தான் பிரிவில் 44வது இடத்தைப் பிடித்த ரெபேக்கா சமீபத்தில் நாடு திரும்பினார்.

55 வயதில் மோகம்; மகளை 2வது திருமணம் செய்து தராத ஆத்திரம் - உயிரோடு எரித்த கொடூரம்!

55 வயதில் மோகம்; மகளை 2வது திருமணம் செய்து தராத ஆத்திரம் - உயிரோடு எரித்த கொடூரம்!

எரித்த காதலன்  

அதன் பிறகு கென்யா நாட்டில் மேற்கு Trans Nzoia மாகாணத்தில் அவருக்கு சொந்தமான வீட்டில் ஓய்வில் இருந்துள்ளார். இந்த நிலையில், வீட்டில் வைத்து ரெபேக்காவுக்கும் அவரது காதலன் டேனியலுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் எழுந்ததாக கூறப்படுகிறது.

ஒலிம்பிக் ஓட்டப் பந்தய வீராங்கனை - பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன் - ஷாக் சம்பவம்! | Uganda Olympic Athlete Was Set On Fire By Her Bf

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ரெபேக்கா மீது பெட்ரோல் ஊற்றி தீவை வைத்துள்ளார் டேனியல். இதனால் அவருக்கு 75 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டேனியலுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக உகாண்டா மற்றும் கென்ய நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.