இனிமேல் குழந்தை வேண்டாமாம்.. 12 மனைவிகளுடன் 102 குழந்தைகள் பெற்ற தந்தை!
கருத்தடை செய்து கொள்ளுமாறு தனது 12 மனைவிகளிடமும் கணவர் கூறியுள்ளார்.
12 மனைவிகள்
உகாண்டா நாட்டின் புகிசா பகுதியை சேர்ந்தவர் மூசா ஹசாஹ்யா(67). பள்ளி படிப்பை முடித்தவுடன் இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. 1971 ஆம் ஆண்டு ஹனிஃபா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். 2 ஆண்டுகளில் இவர்களுக்கு 1 மகள் பிறந்துள்ளார்.

தொடர்ந்து, அடுத்தடுத்து திருமணம் செய்துள்ளார். அதன் படி, தற்போது 12 மனைவிகளுடன் வசித்து வரும் மூசாவுக்கு மொத்தம் 102 குழந்தைகள் மற்றும் 586 பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் புகிசாவில் உள்ள 12 படுக்கை அறைகள் கொண்ட பிரம்மாண்ட வீட்டில் தற்போது வசித்து வருகிறார்.
102 குழந்தைகள்
இந்நிலையில், 12 மனைவிகளிடமும் தயவு செய்து குழந்தை பெற்றக்கொள்ளாதீர்கள். கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள் எனக் கேட்டு கொண்டுள்ளார். போதுமான வருமானம் இல்லாமல் தான் பெற்ற பிள்ளைகளை படிக்க வைக்க முடியவில்லை என இந்த முடிவு எடுத்துள்ளாராம்.

மேலும், விவசாயம் மூலமாக தனது குடும்பத்துக்கு தேவையான உணவு கிடைத்தாலும், தனது குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
“அதிகம் ஆசை உள்ளவர்கள் அதிகபட்சம் நான்கு மனைவிகளோடு நிறுத்திக் கொள்ளுங்கள்” என அட்வைஸையும் கொடுத்துள்ளார்.