சனாதனம் குறித்து உதயநிதி பேசியது தவறே...ஆனாலும் - வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்
அமைச்சர் உதயநிதி மீதான வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
சனாதனம்
கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி, சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் குறித்து பேசிய கருத்துக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. தேசிய அளவில் பேசும் பொருளான இந்த விவகாரத்தில், பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் அமைச்சர் உதயநிதி மீது தொடுக்கப்பட்டது.
இன்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற போது, இந்த வழக்கில் தீர்ப்பை வாசித்த நீதிபதி அனிதா சுமந்த் பேசியது வருமாறு, சனாதன தர்மம் தொடர்பாக மூன்று பேரும் கூறிய கருத்துகள் தவறானது என்று குறிப்பிட்டு, இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உகந்ததுதான் என்றார்.
ஆனால் இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டிய நீதிபதி, இந்து அறநிலையத்துறை இது போன்ற மாநாட்டில் கலந்து கொண்டிருக்க கூடாது என்று வழக்கை முடித்து வைத்தார்.