சனாதனம் குறித்து பேசியதன் விளைவு அறிவேன் - உதயநிதி ஸ்டாலின்..!
கருத்து சுதந்திரத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தவறாக பயன்படுத்தியதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சனாதன வழக்கு
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தற்போது வரை சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருந்து வருகின்றது.
இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
விளைவு அறிவேன்
உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள், கருத்து சுதந்திரத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தவறாக பயன்படுத்தியதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கும் போது, தான் பேசியதன் விளைவை நன்கு அறிவேன் என்று அறிவேன் என்று குறிப்பிட்டு,
6 மாநிலங்களில் வெவ்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன என்றும் எல்லா மாநிலங்களுக்கும் தன்னால் செல்ல முடியாது என குறிப்பிட்டு பொதுவான ஒரு இடத்தில் விசாரிக்க வேண்டும் என்றும் விசாரணையை எதிர்கொள்ள தயார்" என்றும் பதிலளிக்கப்பட்டுள்ளது.