சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது.. அது போல வரிகளை நீக்கினால் திராவிடம் வீழாது -உதயநிதி ஸ்டாலின்!

Udhayanidhi Stalin Tamil nadu DMK R. N. Ravi
By Vidhya Senthil Oct 19, 2024 07:30 AM GMT
Report

  சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது என்பது போல வரிகளை நீக்கினால் ‘திராவிடம்’ வீழாது எனத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆளுநர்

சென்னை தொலைக்காட்சி பொன்விழா மற்றும் இந்தி மாதம் நிறைவு விழா ஆகியவை, சென்னையில் உள்ள தொலைக்காட்சி நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த் தாய் வாழ்த்து பாடலில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்’ எனும் வரியைத் தவிர்க்கப்பட்டது.

udhayanithi stalin

இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில் இந்த விவகாரம் குறித்து உதயநிதி தனது எக்ஸ்த் தள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான்- ஆளுநருக்கு முதலமைச்சர் பதிலடி!

தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான்- ஆளுநருக்கு முதலமைச்சர் பதிலடி!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தமிழ்த்தாய் வாழ்த்தை நடைமுறைப்படுத்திய போது, குறிப்பிட்ட பிரிவினரின் மனம் புண்படாத வண்ணம் சில வரிகளை நீக்கினார்கள். ஆனால் இன்றைக்கு, ஆளுநர் பங்கேற்போடு நடைபெற்ற ‘டிடி தமிழ்’ இந்திக் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைப்பெற்றது.

உதயநிதி ஸ்டாலின் 

 தமிழ்நாடே கொதித்தெழும் வகையில்,தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து ‘திராவிட நல் திருநாடு’ எனும் வரியை நீக்கியிருக்கிறார்கள். யாரும் புண்பட்டுவிடக்கூடாது என்பது #திராவிடம். மாற்றோரைப் புண்படுத்தி மகிழ்வது ஆரியம். இதற்கு மேலும் ஓர் உதாரணமே இச்சம்பவம்! சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது;வரிகளை நீக்கினால் ‘திராவிடம்’ வீழாது!

dd tamil function

இதைப் புரிந்து கொள்ளாத ஆரியநர், அண்ணா வழியில் நடைபோடும் நம் தலைவர் அவர்களுக்கு, ‘கண்ணியம்’ குறித்துப் பாடமெடுக்கத் தேவையில்லை. ஒருமைப்பாட்டுக்கு உலைவைக்க நினைக்கும் அவரை, ஒன்றிய அரசு உடனேத் திரும்பப்பெற வேண்டும் எனத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.