அரசியலை விட்டு விலக ரெடியா? உதயநிதி காலில் விழும் வீடியோ வைரல்!

Udhayanidhi Stalin Viral Video Edappadi K. Palaniswami
By Sumathi Mar 28, 2024 05:49 AM GMT
Report

 தொழிலதிபர் காலில் உதயநிதி விழும் வீடியோ ஒன்று கவனம் பெற்றுள்ளது.

உதயநிதி வீடியோ

தூத்துக்குடியில் பிரச்சாரம் மேற்கொண்ட ஈபிஎஸ் பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி இருக்கும் புகைப்படத்தை காண்பித்து பாஜக-திமுக இடையே தான் கள்ளக் கூட்டணி என விமர்சித்தார்.

eps - udhayanidhi

இதனைத் தொடர்ந்து, வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து உதயநிதி பரப்புரை செய்த போது, கூவத்தூரில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி சசிகலாவால் அறிவிக்கப்பட்ட போது, அவரது காலில் விழுந்து ஆசி பெற்ற புகைப்படத்தை காண்பித்தார்.

பிரதமரே நமது திராவிட நாயகனின் ஆட்சியை பார்த்து பயப்படுகிறார் - அமைச்சர் உதயநிதி!

பிரதமரே நமது திராவிட நாயகனின் ஆட்சியை பார்த்து பயப்படுகிறார் - அமைச்சர் உதயநிதி!

அதிமுகவினர் சாடல்

மேலும், இதுபோன்ற புகைப்படத்தை எடப்பாடி பழனிசாமி காட்டினால் நான் அரசியலில் இருந்து விலக தயார் எனக் கூறினார். இந்நிலையில், 2022ல் உதயநிதி அமைச்சராக பதவியேற்ற போது நடந்த விழாவில்,

அரசியலை விட்டு விலக ரெடியா? உதயநிதி காலில் விழும் வீடியோ வைரல்! | Udhayanidhi Video Viral Aiadmk Slams

ஒருவரது காலில் உதயநிதி விழுவது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில், இருக்கும் நபர் ராஜா சங்கர். உதயநிதியின் பட தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸின் கணக்கு விவரங்களை இவர்தான் பார்ப்பதாக சொல்லப்படுகிறது.

ராஜா சங்கரின் மகன் அர்ஜூன் துரையும் அமைச்சர் உதயநிதியும் சேர்ந்து தான் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தை தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தற்போது, வீடியோவை ஷேர் செய்து அரசியலில் இருந்து விலக தயாரா? என அதிமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.