உதயநிதி ட்வீட் - செயல்வீரர்களே - சேலம் அழைக்கிறது வாரீர்..!

Udhayanidhi Stalin M K Stalin Tamil nadu DMK Salem
By Karthick Jan 20, 2024 04:44 PM GMT
Report

நாளை திமுக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

மாநாடு

திமுகவின் இளைஞர் அணி சார்பில் நடத்தப்படும் 2-வது மாநில மாநாடு சேலம் ஆத்தூர் அருகே அமைந்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் மிக பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

udhayanidhi-tweet-about-dmk-maanadu-happening

தமிழ்நாட்டின் முதல்வர் முக ஸ்டாலின் சிறப்புரையாற்றும் இந்த நிகழ்வில், 22 பேச்சாளர்கள் கலந்து கொண்டு கழக இளைஞர் அணி குறித்த தகவல்களை கூறி சிறப்புரை ஆற்றுகின்றனர்.

ட்ரான் ஷோ, கண்காட்சி - புத்தக நிலையம் - களைகட்ட துவங்கிய திமுக இளைஞர் அணி மாநாடு

ட்ரான் ஷோ, கண்காட்சி - புத்தக நிலையம் - களைகட்ட துவங்கிய திமுக இளைஞர் அணி மாநாடு

உதயநிதி ட்வீட்

இந்நிலையில், இந்த மாநாடு குறித்து கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவிட்டுள்ள பதிவில்,

udhayanidhi-tweet-about-dmk-maanadu-happening

சேலம் அழைக்கிறது செயல்வீரர்களே வாரீர்!

லட்சோப லட்ச இளைஞர்கள் கூடிடும் கொள்கைத் திருவிழாவாக நம் திமுக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் நாளை நடைபெறவிருக்கிறது.

மாநில உரிமைகளை மீட்டெடுத்து இந்திய ஒன்றியத்தை காப்பதற்கு கழகத் தலைவர் அமைத்து தந்திருக்கும் வெற்றிக்களம் இது.

#INDIA-வின் வெற்றியின் மூலம் பாசிசத்தை வீழ்த்தி - பன்முகத்தன்மை காத்திட சேலத்தில் கூடிடுவோம். அனைவரும் வருக! என பதிவிட்டுள்ளார்.