ட்ரான் ஷோ, கண்காட்சி - புத்தக நிலையம் - களைகட்ட துவங்கிய திமுக இளைஞர் அணி மாநாடு
நாளை திமுகவின் இரண்டாவது இளைஞர் மாநில மாநாடு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு
சேலம் மாவட்ட ஆத்தூர் அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞர் அணி மாநாடு நாளை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார்.
இந்த மாநாட்டில் 1.45 லட்சம் முதல் 2.5 லட்சம் வரை மக்கள் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டிற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் இன்று மாலை 5 மணிக்கு சேலம் செல்கிறார். சேலம் சென்று அங்கு இன்று மாநாடு நடக்கும் இடத்தை பார்வையிட்டு அவர் ஆய்வு செய்யவுள்ளார்.
ட்ரான் ஷோ
தொடர்ந்து இந்து மாலை 7 மணி அளவில் மாநாட்டு திடல் அருகில் 1 மணி நேர ட்ரோன் ஷோ நடத்தப்படவுள்ளது. அதனை தொடர்ந்து திமுக தலைவர் மு.க, ஸ்டாலின் திமுக இளைஞர் அணி வரலாறு சிறப்பு புகைப்பட கண்காட்சி, முரசொலி புத்தக நிலையம் போன்றவற்றை திறந்து வைக்கிறார்.
முன்னதாக இந்த மாநாட்டில் 22 பேச்சாளர்கள் மொழிப்போர் தியாகிகள், மாநில சுயாட்சி, கல்வி உள்ளிட்ட தலைப்புகளில் உரையாற்ற உள்ளனர். மேலும், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸடாலின் தலைமை உரையும்,
அதனை தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் உரையாற்ற உள்ளார்கள். மாநாட்டின் நிறைவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.