உதயநிதிக்கு தேடி வரும் துணை முதல்வர் பதவி? சில அமைச்சர்களுக்கு கல்தா!
அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் உதயநிதி
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கு பின் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லவுள்ளார்.
அதற்கு முன்னதாக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கவும், லோக்சபா தேர்தலில் கட்சித் தலைமை எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படாத சில அமைச்சர்களின் இலாகாக்களை பறிக்கவும் திமுக ஆலோசித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துணை முதல்வர் பதவி?
முன்னதாக கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால், உடனே உதயநிதியை துணை முதல்வராக்க, ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். சனாதனம் தொடர்பான வழக்குகளில், சட்ட ரீதியான சில நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியிருந்ததால் அப்போது அது நடக்கவில்லை.
மூத்த அமைச்சர்கள் சிலர் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை வளையத்தில் இருப்பதால், அவர்களிடம் இருந்து இலாக்காக்களை பறிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.