மது ஒழிப்பு மாநாடு; அதிமுகாவை அழைத்த திருமாவளவன் - உதயநிதி சொன்ன அந்த பதில்!

Abbas Udhayanidhi Stalin Thol. Thirumavalavan Tamil nadu
By Swetha Sep 10, 2024 11:30 AM GMT
Report

மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுக அழைக்கப்பட்டது குறித்து உதயநிதி பதிலளித்துள்ளார்.

மது ஒழிப்பு மாநாடு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு அக் 2ம் தேதி கள்ளாகுறிச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.

மது ஒழிப்பு மாநாடு; அதிமுகாவை அழைத்த திருமாவளவன் - உதயநிதி சொன்ன அந்த பதில்! | Udhayanidhi Talks About Vck Thiruma Inviting Admk

திமுக கூட்டணியில் விசிக அங்கம் வகித்து வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் இந்த திடீர் அழைப்பு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பபை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,

விசிக சார்பில்..மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு - அதிமுகவுக்கு அழைப்பு!

விசிக சார்பில்..மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு - அதிமுகவுக்கு அழைப்பு!

உதயநிதி பதில்

சிவகங்கையில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "சிவகங்கை மாவட்டத்தில் நடந்து வரும் அரசு திட்டங்களை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

மது ஒழிப்பு மாநாடு; அதிமுகாவை அழைத்த திருமாவளவன் - உதயநிதி சொன்ன அந்த பதில்! | Udhayanidhi Talks About Vck Thiruma Inviting Admk

ஆய்வுக்கூட்டத்தின் அறிக்கைகள் தயார் செய்யப்பட்ட பிறகு முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும். விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க.வை அழைத்து அவர்களின் தனிப்பட்ட விருப்பம். என்று தெரிவித்துள்ளார்.