இன்று துணை முதல்வராக உள்ள உதயநிதி? அண்ணா அறிவாலயம் வந்த ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார்.
உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக உள்ளார் என்ற பேச்சு கடந்த சில மாதங்களாகவே திமுகவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பல திமுக அமைச்சர்களும் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆக உள்ளார் என கருத்து தெரிவித்து வந்தனர்.
ஸ்டாலின் ஆலோசனை
முதல்வர் அமெரிக்கா பயணம் செல்லும் முன் உதயநிதியை துணை முதல்வராக நியமித்து விட்டு செல்வார். அமெரிக்கா சென்று வந்த பின் அமைச்சரவை மாற்றம் செய்யும் போது உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று நடந்த திமுக பவள விழாவில் மேடையில் பேசிய மு.க. ஸ்டாலின் விருது பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், "உங்களுக்கும், மேடையில் இருக்கும் தலைவர்களுக்கும் ஏன் இன்னும் தயக்கம். உதயநிதியை துணை முதலமைச்சராக்க வேண்டாமா?" எனப் பேசியிருந்தார்.
தற்போது திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் வந்துள்ள முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் அங்கு மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார். அறிவாலயம் முன் தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இன்று அமைச்சரவை மாற்றம் மற்றும் துணை முதல்வர் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Foot Massge: வெறும் 5 நிமிடம் பாதங்களை மசாஜ் செய்து பாருங்க... இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது! Manithan

இலங்கையில் ஆட்சி மாற்றம் : எந்தநேரத்திலும் எதுவும் நடக்கலாம் : இப்படி கூறுகிறது ரணில் தரப்பு IBC Tamil
