உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி - தாமதத்தின் பின்னணி இதுதான்

Udhayanidhi Stalin M K Stalin DMK
By Karthikraja Aug 28, 2024 08:30 AM GMT
Report

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக நியமிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்தது. அப்போதே, முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. 

udhayanidhi stalin

இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். அமைச்சர் சி.வி.மெய்யநாதன் வகித்து வந்த விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு, ஊரக கடன் ஆகிய துறைகள் அவருக்கு வழங்கப்பட்டது. 

முக்கிய புள்ளிகளுக்கு தடபுடலாக விருந்தளித்த உதயநிதி - என்ன நடக்க போகிறது திமுகவில்?

முக்கிய புள்ளிகளுக்கு தடபுடலாக விருந்தளித்த உதயநிதி - என்ன நடக்க போகிறது திமுகவில்?

செந்தில் பாலாஜி

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா பயணம் செல்ல உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு முன்னதாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவலை சில அமைச்சர்களே உறுதிப்படுத்தினார்கள். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கேட்ட போது, "அப்படி எதுவும் எனக்கு தகவல் வரவில்லை" என்று அந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

senthil balaji

இந்நிலையில், சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் விரைவில் அவருக்கு ஜாமீன் கிடைக்கும் நிச்சயமாக விடுதலையாவார் என்ற நம்பிக்கையில் திமுக தலைமை உள்ளது. செந்தில் பாலாஜி குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டால், மீண்டும் அவர் வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஸ்டாலின் அமெரிக்கா பயணம்

அப்பொழுது உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், புதிதாக 3 அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அதில், சேலம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

mkstalin us visit

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினிடம் அமெரிக்கா பயணம் முடித்து தமிழகம் திரும்பியதும் அமைச்சரவை மாற்றம் இருக்குமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, மாறுதல் ஒன்றுதான் மாறாதது. பொறுத்திருந்து பாருங்கள் என சிரித்தப்படி கூறிவிட்டு சென்றார்.