நான் துணை முதலமைச்சர் ஆவதற்கு ரஜினி ஆவேசம்?அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி!
யூடியூப் தலைப்பை பார்த்து அதிர்ந்து போனேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உதயநிதி
சென்னை தியாகராயர் நகரில் உள்ள மாநகராட்சி அரங்கில், ஆழி பதிப்பகம் சார்பில் தேர்தல் 2024:மீளும் 'மக்கள்' ஆட்சி நூல் வெளியீடு விழா நடைபெற்றது. இதில் இளைஞர் நாள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட அரசியல் செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட் முதல் பிரதியை பெற்று கொண்டார். அப்போது பேசிய அவர், இன்று ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு எனது போனை எடுத்துப் பார்த்தேன்.
பதிலடி
யூடியூப்-ல் என்னைப் பற்றிய ஒரு வீடியோவில் டைட்டில் வச்சிருந்தாங்க, படிச்சுப் பார்த்ததும் பயந்துட்டேன். உதயநிதி துணை முதலமைச்சர் ஆவதற்கு ரஜினி ஆவேசம் என்று இருந்தது,
துணை முதலமைச்சர் பதவி குறித்து என்னிடம் கேட்டீர்கள் ஆனால் அவரிடம் கேட்பது என்ன நியாயம்? அவர் பாவம் பட சூட்டிங்காக செல்கிறார். இப்போது கூட உதயநிதி,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பதிலடி என்று கூட தலைப்பு வைத்தாலும் வைப்பீர்கள்.துணை முதலமைச்சர் விவகாரம் குறித்து முதல்வர் தான் முடிவு செய்வார். என்று தெரிவித்துள்ளார்.