Wednesday, May 14, 2025

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி? கோபமாக பதிலளித்த ரஜினிகாந்த்

Rajinikanth Udhayanidhi Stalin
By Karthikraja 8 months ago
Report

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவது குறித்த கேள்விக்கு ரஜினிகாந்த் கோபமாக பதிலளித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆக உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அமைச்சர்களும் மேடைகளில் இந்த கருத்தை பேசி வந்தனர். 

udhyanidhi stalin

அடுத்த 10 நாட்களில் அமைச்சர் உதயநிதி, துணை முதல்வராக அறிவிக்கப்படுவார் என அமைச்சர் தமோ அன்பரசன் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்த நாளில்தான் உதயநிதி பதவியேற்பார் - அடித்து சொல்லும் தமிழிசை

இந்த நாளில்தான் உதயநிதி பதவியேற்பார் - அடித்து சொல்லும் தமிழிசை

ரஜினிகாந்த்

இந்நிலையில் விமான நிலையத்திற்கு வந்த ரஜினிகாந்தை செய்தியாளர்களை சந்தித்து கேள்வி எழுப்பினர். வேட்டையன் பட இசை வெளியீட்டு விழாவில் யார் எல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்ற கேள்விக்கு அது பற்றி எனக்கு தெரியாது என பதிலளித்தார். 

rajinikanth

உதயநிதி துணை முதல்வர் ஆவார் என சொல்கிறார்கள் அதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு அரசியல் கேள்விகளை கேட்காதீங்கனு சொல்லிருக்கேன் என விரலை நீட்டி கோபமாக பதிலளித்தார்.