இந்த நாளில்தான் உதயநிதி பதவியேற்பார் - அடித்து சொல்லும் தமிழிசை
கூட்டணி கட்சிகளுக்கே திமுக மீது நம்பிக்கை இல்லை என தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன்
தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார். இதில் பேசிய அவர், "ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் பொத்தம் பொதுவாக எடுக்கப்பட்ட முடிவு கிடையாது. இது நல்ல திட்டம், மக்களுக்கான திட்டம்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு சென்று முதலீட்டுகளை ஈர்ப்பதாக சொல்லுகிறார்கள். ஆனால் 10 நாட்களாக சாம்சங் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதை பற்றி முதல்வர் கண்டுகொள்வதில்லை. இந்த போராட்டத்தின் பின்னணியில் கம்யூனிஸ்ட்கள் இருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின்
திருமாவளவன் கூட்டணியில் உள்ள பிரச்சனையால்தான் மதுவிலக்கு மாநாடு நடத்துகிறார். கூட்டணி கட்சிகளுக்கே திமுக மீது நம்பிக்கை இல்லை.திடீரென உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் நிச்சயமாக இன்று இருக்காது என நம்பினேன். ஏனெனில் பாட்டிமை அன்று அவர்கள் நிச்சயமாக பதவியேற்க மாட்டார்கள்.
நான் சவால் விடுகிறேன் உதயநிதி துணை முதல்வராக பதவியேற்றால் அந்த நாள் முகூர்த்த நாளாக தான் இருக்கும். பவள விழா தொண்டர்களுக்காக நடத்தப்பட்ட விழா அல்ல. உதயநிதிக்கு முடிசூடுவதற்கான தொடக்க விழா" என தெரிவித்துள்ளார்.