என்னவிட என் பையன் ரொம்ப லூட்டி அடிக்கிறான் - உதயநிதி ஸ்டாலின் ஓபன்டாக்!

Udhayanidhi Stalin
By Sumathi Jun 30, 2023 08:14 AM GMT
Report

தனது மகன் குறித்த தகவலை உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். அதன்பின், மனிதன், சைகோ, கண்ணே கலைமானே, நிமிர் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

என்னவிட என் பையன் ரொம்ப லூட்டி அடிக்கிறான் - உதயநிதி ஸ்டாலின் ஓபன்டாக்! | Udhayanidhi Stalin Talks About His Son Inbanidhi

இதற்கிடையில், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவானார். திடீரென விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இனி சினிமாவில் நடிக்கமாட்டேன் என தெரிவித்திருந்தார்.

மகன் குறித்த தகவல்

இந்நிலையில் அவர் நடிப்பில் வெளியான கடைசி படம் மாமன்னன். முன்னதாக அந்தப் படம் குறித்த நேர்காணலில், கிருத்திகா 12ஆம் வகுப்பு படிக்கும்போது நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்தேன். 7,8 வருடங்களாக இரண்டு பேரும் காதலித்தோம். இதுகுறித்து எனது தந்தையிடம் தனியாக பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்கிவிட்டேன்.

என்னவிட என் பையன் ரொம்ப லூட்டி அடிக்கிறான் - உதயநிதி ஸ்டாலின் ஓபன்டாக்! | Udhayanidhi Stalin Talks About His Son Inbanidhi

ஓவர் லூட்டி: காதல் திருமணம் இப்போதைக்கு சாதாரணம் ஆகிவிட்டது. என் மகன் இன்பநிதியும் நான் பண்ணியதைவிட அதிகம் லூட்டி அடிக்கிறான். அவனிடமே நான் சென்று பார்த்து பண்ணுப்பா. வயதுக்கு ஏற்ற மாதிரி பண்ணுப்பா என கூறியிருக்கிறேன் என உதயநிதி தெரிவித்துள்ளார்.