விஜய் அரசியலுக்கு வந்தால் கூட்டணி.. ஆனால் - உதயநிதி ஸ்டாலின் பளீச்
விஜய் அரசியலுக்கு வந்தால் அவருடன் கூட்டணி வைக்க ஒரு கண்டிஷன் உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விஜய்
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு அண்மையில் நடிகர் விஜய் விருது வழங்கி கெளரவித்தார். அது அவரது அர்சியல் வருகையை அறிவிக்கும் விழாவாக இருக்கவேண்டும் என்றே ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
மேலும், இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், விஜய் நடத்திய நிகழ்ச்சி அவரின் அரசியல் வருகைக்கான ஆரம்பமாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். அது குறித்து விஜய் தான் பதில் அளிக்க வேண்டும்.
உதயநிதி கருத்து
அவரிடம் கேட்காமல் அது பற்றி அனைவரிடமும் கேட்டு வருகிறார்கள். விஜய் தான் ஒரு முடிவு எடுத்து பதில் அளிக்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவியரை விஜய் பாராட்டியது நல்ல விஷயம்.
ஆனால் அவர் அரசியலுக்கு வரும்போது தன் கொள்கைகள் குறித்து விளக்க வேண்டும். எங்கள் கட்சிக்கென்று சில கொள்கைகள் இருக்கின்றது. மாநில சுயாட்சி, இந்தி திணிப்பு எதிர்ப்பு போன்ற கொள்கைகள் உள்ளன.
விஜய்யின் அரசியல் கொள்கைகள் எங்கள் கட்சி கொள்கைகளுடன் ஒத்துப் போனால் அவருடன் சேர்ந்து பயணிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.