பெண்களை பார்த்து கைதட்டி சிரித்த பெரியார்- உதயநிதி சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
திராவிட மாடல் ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு இணையான அனைத்து வசதிகளையும் அரசு பள்ளிகளில் செய்யப்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின்
சென்னையில் சர்வதேச ,தேசிய , மாநில அளவிலான விளையாட்டு போட்டியிகளில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் கடந்தாண்டு 10,12 வகுப்பு அரசு பொது தேர்வுகளில் 100% தேர்ச்ச்சி பெட்ரா தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடைப்பெற்றது.
இதில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்,''திராவிட கட்சியில் இருக்கும் ஒவ்வொரு தொண்டனுக்கும் படிக்கின்ற மாணவரை பார்த்தால் ஒரு தனி மகிழ்ச்சி ஏற்படும் என்று தெரிவித்தார்.
அதற்க்கு எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்வை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் தெரிவித்த அவர்,'' பெரியார் ஒருமுறை ஒரு பொதுக்கூட்ட நிகழ்ச்சியை முடித்து கொண்டு போகும் போது அந்த வழியாக பெண் பிள்ளைகள் பள்ளி முடித்துவிட்டு சென்றனர் .
பெரியார்
இதனை கண்ட தந்தை பெரியார் ஒரு சிறு குழந்தை போல கைத்தட்டி மகிழ்ந்தார். அப்போது பெரியார் , இதற்கு தான் காலம் முழுவதும் போராடினேன் . திராவிட இயக்கத்தின் பலணை இன்று கண்முன்னாடி பார்த்துவிட்டேன் என்று தெரிவித்ததாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருணாநிதி முதல்வராக இருந்த போது பெண் பிள்ளைகள் பள்ளிகளுக்கு நடந்து செல்லக்கூடாது என்பதற்காக இலவச பேருந்தை அறிவித்தார். இப்போது பள்ளி படிப்பை படித்து வரும் மாணவர்கள் அனைத்து துறைகளிலும் உயர வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் திராவிட மாடல் ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு இணையான அனைத்து வசதிகளையும் அரசு பள்ளிகளில் செய்யப்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.