Saturday, May 10, 2025

குழந்தைக்கு பெயர் - ரோலக்ஸ் என்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - அதிர்ந்த தொண்டர்கள்

Udhayanidhi Stalin Tamil nadu DMK Dharmapuri
By Karthick a year ago
Report

 அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

திமுக பிரச்சாரம்

திமுக கூட்டணியில் வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள், முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர்கள், நட்சத்திரங்கள் என பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

udhayanidhi-stalin-child-name-rolex

தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அண்மையில் தருமபுரி திமுக வேட்பாளர் மணி'யை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தில் தவறுதலாக வந்த வார்த்தை...உடனே தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்ட அமைச்சர் உதயநிதி

பிரச்சாரத்தில் தவறுதலாக வந்த வார்த்தை...உடனே தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்ட அமைச்சர் உதயநிதி

ரோலக்ஸ்

பிரச்சாரத்தின் நடுவே, குழிமிருந்த தொண்டரில் ஒருவர் தனது குழந்தைக்குப் பெயர் வைக்கும்படி உதயநிதியிடம் கேட்டார். உதயநிதி குழந்தைக்கு பற்றிய தகவல்களை கேட்ட நிலையில், இப்போது குழந்தைக்கு என்ன பெயர் வைத்து இருக்கிறீர்கள் என்றார்.

udhayanidhi-stalin-child-name-rolex

அதற்குக் பெற்றோர்கள் "ரோலக்ஸ்" எனக் கூற, உடனே உதயநிதி, "ரோலக்ஸா.. சூப்பர் பெயர்.. அதே இருக்கட்டும்" என்றார். இதனை கேட்ட அங்கிருந்த திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.