பிரச்சாரத்தில் தவறுதலாக வந்த வார்த்தை...உடனே தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்ட அமைச்சர் உதயநிதி
மக்களவை தேர்தல் நெருங்கும் சூழலில், தமிழகமெங்கும் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
திமுக பிரச்சாரம்
திமுக கூட்டணியில் வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள், முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர்கள், நட்சத்திரங்கள் என பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக கூட்டணியில் முதல் முறையாக திருச்சி தொகுதியில் மதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார் வைகோவின் மகன் துரை வைகோ. மதிமுக தங்களது சின்னமான பம்பரம் சின்னம் கேட்ட நிலையில், அச்சின்னம் மறுக்கப்பட்டு மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேற்று திருச்சியில் துரை வைகோவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
மன்னிச்சிடுங்க
பிரச்சாரத்தின் போது மாநில அரசின் திட்டங்களை பட்டியலிட்ட அமைச்சர் உதயநிதி, வரும் 19-ஆம் தேதி நீங்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பீர்களா..? என்று தொண்டர்களிடம் வினவினார்.
அப்போது சிலர் தீப்பொட்டி சின்னம் என உதயநிதியிடம் கூற, அவரும் சிரித்தபடியே, மன்னிச்சிடுங்க, கூட்டணி சின்னமான தீப்பெட்டியில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, நான் தப்பு செஞ்சாலும் நீங்கள்(தொண்டர்கள்) தெளிவாக இருக்கிறீர்கள் என்றார்.
மேலும், நான் உங்களை ‛செக்' செய்ததாக குறிப்பிட்ட உதயநிதி, நீங்கள் தெளிவாக இருக்குறீர்களா..? என்று பார்த்தேன் என கூறி, அனைவரும் தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து சகோதரர் துரை வைகோவையை வெற்றி பெற வைக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.