அறிவு இருக்கிறவன் அறிவு திருவிழா நடத்துறான் - விஜய்யை அட்டாக் செய்த உதயநிதி!
அறிவு இருக்கிறவன் அறிவு திருவிழா நடத்துறான் என தெரிவித்து உதயநிதி விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அறிவு திருவிழா
திமுக கட்சியின் 75வது ஆண்டு விழாவையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி் சார்பில் அறிவுத் திருவிழா நடத்தப்பட்டது. கடந்த 8 ம் தேதி இந்த விழாவை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதில் தவெகவை மறைமுகமாக விமர்சனம் செய்தனர். இதனையடுத்து விஜய் திமுக மற்றும் அதன் அறிவுத் திருவிழாவை விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டார்.
அதில் நாம், அவர்கள் மீது வைக்கின்ற மிக லேசான விமர்சனங்களுக்கே மக்கள் மிக பலமான வரவேற்பை அளிக்க தொடங்கி உள்ளனர்.அறிவுத் திருவிழா என்று பெயர் வைத்துவிட்டு, முழுக்க முழுக்க, தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமே மறைமுகமாகத் திட்டும் திருவிழாவாக அதை மாற்றியதிலேயே
உதயநிதி பதிலடி
அது அறிவுத் திருவிழாவாக இல்லாமல் அவதூறுத் திருவிழாவாகத்தானே மாறியதாக குறிப்பிட்டார். இந்நிலையில் திமுகவின் அறிவுத் திருவிழாவின் புத்தக திருவிழா முடிவடைந்தது. இந்த விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

‛‛இப்போது மக்கள் புதிதாக கிளம்பி இருக்குறாங்க.. நாம் அறிவுத்திருவிழா நடத்தி 4 நாட்களுக்கு பிறகு தான் அவர்களுக்கு தெரிந்து இருக்கிறது. எப்படி அறிவு திருவிழா நடத்தினீர்கள். யாரை கேட்டு நடத்துகிறீர்கள். எதுக்காக நடத்துகிறீர்கள் என்று கேட்கிறாங்க.
அறிவு இருக்கிறவன் திருவிழா நடத்துறான்.. அறிவு திருவிழாவில் அவர்களே விமர்சித்து பேசுகிறோம் என்று கோபம் வேறு. எப்படி போலீசை பார்த்தால் திருடனுக்கு பயம் வருமோ.. அறிவு என்கிற வார்த்தையை கேட்டாலே அவங்களுக்கு அலர்ஜி.
சுகாதாரம் பற்றி பேசினால் கிருமிகளை பற்றி பேசாமல் இருக்க முடியுமா. அதில் இருந்து எப்படி விலகி இருக்க வேண்டும் என்று சொன்னால் தான் சுகாதார மேம்பாடு பற்றி பேச முடியும். அதனால் தான் அறிவு திருவிழாவில் கொள்கை பற்றி பேசும்போது கொள்கையற்ற கும்பலின் ஆபத்து பற்றி பேசியதை சுட்டிக்காட்டி உள்ளனர்.
இதையெல்லாம் பொருட்படுத்த வேண்டிய அவசியம். இல்லை. திமுக என்பதே ஒரு அறிவு இயக்கம். வெற்று அட்டைகளுக்கு பதில் சொல்ல வேண்டாம்'' என்று பதிலடி கொடுத்துள்ளார்.
புத்தர் சிலை விவகாரம் - வாக்குறுதியை காற்றில் பறக்க விட்ட அநுர அரசு: சுமந்திரன் கடும் சீற்றம் IBC Tamil