Go Back Modi இல்ல - Get Out Modi தான்...பிரச்சாரத்தில் உதயநிதி உறுதி

Udhayanidhi Stalin DMK Narendra Modi Chennai Lok Sabha Election 2024
By Karthick Apr 14, 2024 02:21 AM GMT
Report

இந்த முறை திரும்பி பார்க்காத அளவிற்கு பிரதமர் மோடியை ஓட விட வேண்டும் என உதயநிதி பிரச்சாரத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

உதயநிதி பிரச்சாரம்

மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொண்ட போது பேசியது வருமாறு,

udhayanidhi-stalin-says-no-go-back-get-out-modi

நம் மாநில உரிமைகளை காக்க 40 தொகுதிகளையும் ஜெயிக்க வேண்டும். கலைஞர் பேரன் தயாநிதிமாறனுக்கு மற்றொரு பேரன் உதயநிதி ஸ்டாலின் ஓட்டு கேட்டு இங்கே இருக்கும் கலைஞரின் கொள்கை பேரர்கள் லட்சிய பேரர்களிடம் வந்துள்ளேன்.

கெட் அவுட் மோடி

மழை வெள்ளம் பாதிப்பின் போது, முதலமைச்சர் 6 ஆயிரம் ரூபாய் கொடுத்தார், ஆனால் மோடி தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. புதிதாக ஒரு வடை சுடுகிறார்.

என்னை கண்டால் அவர்களுக்கு பயம் தான் - நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா பரபரப்பு பேச்சு

என்னை கண்டால் அவர்களுக்கு பயம் தான் - நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா பரபரப்பு பேச்சு

அதனை அவரே சாப்பிட்டு விடுவார். எந்த விதம் முன்னேற்றமும் தமிழ்நாடு அடையக்கூடாது என்பதற்காக மோடி பழிவாங்கிக் கொண்டிருக்கிறார், சென்ற முறை அவரை ஓட ஓட அடித்து விரட்டினீர்கள்.

udhayanidhi-stalin-says-no-go-back-get-out-modi

இம்முறை திரும்பி பார்க்காத அளவிற்கு ஓட விட வேண்டும், நீங்கள் போடும் ஓட்டு மோடிக்கு வைக்கப் போகும் வேட்டு,இம்முறை கோ பேக் மோடி கிடையாது கெட் அவுட் மோடி தான்.