வெடிக்கும் சர்ச்சை; “இந்தி தெரியாது போடா” - அசால்ட்டா தட்டி விட்டுச் சென்ற உதயநிதி!

Udhayanidhi Stalin
By Sumathi Sep 06, 2023 03:26 AM GMT
Report

இந்தி தெரியாது போடா என உதயநிதி ஸ்டாலின் நச் பதிலடி கொடுத்துள்ளார்.

சனாதனம்

சனாதனம் எதிர்க்க வேண்டிய விஷயம் அல்ல; ஒழிக்க வேண்டிய விஷயம் என்று உதயநிதி பேசியது பெரும் சர்சையாக வெடித்துள்ளது. அதனை இந்து மதத்தின் மற்றொரு பெயர் தான் சனாதனம்.

வெடிக்கும் சர்ச்சை; “இந்தி தெரியாது போடா” - அசால்ட்டா தட்டி விட்டுச் சென்ற உதயநிதி! | Udhayanidhi Stalin Sarcastic Reply Bjp Supporter

அப்படியென்றால் இந்து மதத்தையும், இந்துக்களையும் அழிக்க வேண்டும் என்று உதயநிதி கூறுகிறார் என பாஜகவினர் புகார் கூறி வருகின்றனர். தொடர்ந்து இவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நச் பதிலடி 

அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா என்பவர் அமைச்சர் உதயநிதியின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி என அறிவித்து மிரட்டல் விடுத்தார்.

இந்நிலையில், ஜார்க்கண்ட் ஹசாரிபாக் என்ற இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சனாதன ஆதரவாளர்கள், இந்துத்துவ அமைப்பினர் ஒன்று திரண்டு உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பான வீடியோவை பகிர்ந்து பாஜக ஆதரவாளர் ஒருவர் உதயநிதி ஸ்டாலினை குறிப்பிட்டு ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதற்கு உதயநிதி ஸ்டாலின், "இந்தி தெரியாது போடா" என ரிப்ளை கொடுத்துள்ளார். இந்த பதிவு தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.