என் தலைய சீவ எதுக்கு 10 கோடி? 10 ரூபாய் சீப்பு போதும் - கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்
என் தலைய சீவ எதுக்கு 10 கோடி? 10 ரூபா சீப் போதும் என உதயநிதி ஸ்டாலின் பதில் தெரிவித்துள்ளார்.
10 கோடி?
சனாதனம் எதிர்க்க வேண்டிய விஷயம் அல்ல; ஒழிக்க வேண்டிய விஷயம் என்று உதயநிதி பேசியது பெரும் சர்சையாக வெடித்துள்ளது. அதனை இந்து மதத்தின் மற்றொரு பெயர் தான் சனாதனம். அப்படியென்றால் இந்து மதத்தையும்,
இந்துக்களையும் அழிக்க வேண்டும் என்று உதயநிதி கூறுகிறார் என பாஜகவினர் புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில், சனாதனத்தை பற்றி அவதூறாக பேசிய
உதயநிதி கலாய்
தமிழக அமைச்சர் உதயநிதியின் தலையை கொண்டுவருவோருக்கு ரூ.10 கோடி சன்மானம் என அயோத்தியை சேர்ந்த சந்நியாசியான பரம ஹன்ஸ் ஆச்சாரியா அறிவித்துள்ளார். மேலும், உதயநிதியின் புகைப்படத்தை குத்திக் கிழித்து எரித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள உதயநிதி ஸ்டாலின், என் தலை மீது உங்களுக்கு என்ன ஆசை? ஒரு சாமியாரிடம் எப்படி ரூ.10 கோடி இருக்கும்? அப்ப அந்த சாமியார் உண்மையான சாமியாரா? இல்ல போலி சாமியாரா? என் தலைய சீவ எதுக்கு 10 கோடி? 10 ரூபா சீப் போதும். சீப்பை கொடுத்தால் நானே சீவிப்பேன்.
இதே மாதிரி ஒரு சாமியார் கலைஞரையும் மிரட்டினார். கலைஞர் தலையை சீவி கொண்டுவருவோருக்கு ரூ.1 கோடி எனக் கூறினார். இதற்கு கலைஞர் என்ன சொன்னார் தெரியுமா? நீங்கள் 100 கோடி ரூபாய் கொடுத்தால் என் தலையை என்னாலேயே சீவ முடியாது என பதிலடி கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.