சனாதனம்: யாரு அண்ணாமலை? அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது - அசால்ட்டாக தவிர்த்த உதயநிதி!
அண்ணாமலை தொடர்பான கேள்வியை அமைச்சர் உதயநிதி புறக்கணித்துள்ளார்.
சனாதனம்
சனாதனம் எதிர்க்க வேண்டிய விஷயம் அல்ல; ஒழிக்க வேண்டிய விஷயம் என்று உதயநிதி பேசியது பெரும் சர்சையாக வெடித்துள்ளது. அதனை இந்து மதத்தின் மற்றொரு பெயர் தான் சனாதனம்.
அப்படியென்றால் இந்து மதத்தையும், இந்துக்களையும் அழிக்க வேண்டும் என்று உதயநிதி கூறுகிறார் என பாஜகவினர் புகார் கூறி வருகின்றனர். மேலும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் உதயநிதியின் பேச்சு இந்து மதத்தினரின் மனதை புண்படுத்துவதாக கூறி அவர் மீது டெல்லி போலீஸில் புகாரும் அளித்துள்ளார்.
உதயநிதி கருத்து
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, "சனாதனம் பற்றி நான் பேசியது சரியானதுதான். இனிமேலும் அப்படித்தான் பேசுவேன். எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன். சனாதனம் பற்றி நான் பேசியதற்கு அதிமுகவினரின் கருத்துகளை கேளுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சனாதனம் பற்றி பேசியதை ஒரு குறிப்பிட்ட மதத்தினரை குறிவைத்து தாக்குவதாக அண்ணாமலை கூறியிருக்கிறாரே என நிருபர் ஒருவரின் கேள்விக்கு, யாரு.. அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க.. எனக்கு எல்லா மதமும் ஒன்றுதான்.. ஜாதி, மதங்களில் நம்பிக்கை இல்லாத ஆளு நான் எனக் கூறிவிட்டுச் சென்றார்.