அதை மட்டும்தான் கேட்டேன்; அப்பன் என்ற சொல் கெட்ட வார்த்தையா? உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
அப்பன் என்ற சொல் கெட்ட வார்த்தையா? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெள்ள நிவாரணம்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது. மத்திய அரசு நிதி வழங்குவது குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உங்க அப்பன் வீட்டு சொத்தா என கேட்கிறார்.
அவருக்கு நாவடக்கம் தேவை. இது ஒன்றும் அவுங்க அப்பா வீட்டு சொத்து இல்லை என எச்சரித்தார். இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள உதயநிதி ஸ்டாலின், நிதியை மட்டும்தான் கேட்டேன். யாரை பற்றியும் தவறாக பேசவில்லை.
உதயநிதி ஸ்டாலின் கேள்வி
அப்பன் என்ற சொல் கெட்ட வார்த்தையா? பேரிடர் கால நடவடிக்கையை மத்திய நிதியமைச்சர் அரசியலாக்க முயற்சிக்கிறார். உன் தவறு, என் தவறு என குற்றச்சாட்டுகளை கூறி எதையும் அரசியலாக்க விரும்பவில்லை. புயல், வெள்ள பாதிப்பை உணர்ந்து தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி தர வேண்டும்.
ஒன்பதரை ஆண்டு மோடி ஆட்சியே பேரிடர் என சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் முழு வீச்சில் மீட்பு, நிவாரணப்பணிகள் நடைபெறுகிறது. வெள்ளத்தால் ஏரல் பேரூராட்சி அதிக பாதிப்பை சந்தித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் தலைவர் மரணத்தில் தொடரும் மர்ம புதிர்: மீண்டும் குறிவைக்கப்படும் ஈழத்தமிழர்கள் IBC Tamil
