‘‘எங்களால் முடியவில்லை என காவல் துறையினர் கெஞ்சினர்” குரல் கொடுக்கும் உதயநிதி
எங்களால் முடியவில்லை பிரச்சாரம் செய்யாதீங்க என காவல்துறையினர் தன்னிடம் கெஞ்சியதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக தனது தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் .
அண்மையில் பிரச்சார கூட்டத்தில் பேசும்போது, எனக்கு வரும் கூட்டத்தைப் பார்த்து பிரச்சாரம் செய்யவேண்டாம் என்று காவல்துறையினர் கூறினர். ஆனால் நானோ திமுக தலைவர் என்னை பிரச்சாரம் செய்ய செல்லி உள்ளார். உங்களின் மிரட்டலுக்கு பணியமாட்டேன் , நான் கலைஞரின் பேரன் என கூறி சென்றுவிட்டேன்.
பின்னர் தினமும் என்மீது வழக்கு பதிவு செய்தனர் சில இடங்களில் கைதும் செய்தனர். பின்பு ஒருக்கட்டத்தில், ’தயவு செய்து பிரச்சாரம் செய்யாதீங்க. எங்களால முடியல.
மத்தவங்க கைது பண்ணி விட்டா வீட்டுக்குப் போய்டுவாங்க. நீங்க விடிய விடிய பிரச்சாரம் பண்றீங்க. உங்கப் பின்னாடியே எங்களால சுத்திட்டிருக்க முடியலஎன காவல்துறையினர் என்னிடம் கெஞ்சினர் என கூறியுள்ளார்.
கடந்த சில காலமாக தேர்தல் நெருங்குவதால் சினிமாவிற்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு அரசியலில் குதித்துள்ளார் உதயநிதி இவரின் செல்வாக்கு எப்படி உள்ளது எனபதை தேர்தல் முடிவு செய்யும்.