கமல்ஹாசன் படத்தில் ஹீரோவாக கமிட்டான உதயநிதி - நன்றி தெரிவித்து டுவிட்

Kamal Haasan Udhayanidhi Stalin
By Nandhini Jul 26, 2022 06:38 AM GMT
Report

நடிகராகவும், அரசியல்வாதியாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் அடுத்ததாக கமல் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் விழா

நேற்று, உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நேற்று தங்களது 15-வது ஆண்டு விழாவை கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர் அமீர் கான் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்.

Udhayanidhi Stalin - Kamal Haasan

இவ்விழாவில், நடிகர் கமல்ஹாசன், தனது அடுத்த படத்தில் உதயநிதி நாயகனாக நடிக்க இருப்பதாக சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிட்டார்.

கமல்ஹாசனின் ‘ராஜ் கமல் பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்க உள்ள 54-வது படத்தில் உதயநிதி நாயகனாக நடிக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கமலுக்கு நன்றி தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் 

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், 15 வருட ரெட் ஜெயண்ட் மூவிஸ்-ன் சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக உடன் பங்காற்றியவர்களை நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவித்தோம். ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான அறிவிப்பை வெளியிட்ட நடிகர் கமல்ஹாசன் சாருக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.