‘என்னை சின்னவர் என்றே அழையுங்கள்’ - உதயநிதி ஸ்டாலின்

Udhayanidhi Stalin M K Stalin Tamil nadu DMK
By Nandhini Jun 27, 2022 05:31 AM GMT
Report

என்னை மூன்றாம் கலைஞர் என்றெல்லாம் அழைக்க வேண்டாம்.என்னை சின்னவர் என்றே அழையுங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேற்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ராஜ ராஜகோபாலத் தொண்டைமானின் உருவ சிலைக்கு திமுக இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

‘என்னை சின்னவர் என்றே அழையுங்கள்’ - உதயநிதி ஸ்டாலின் | Udhayanidhi Stalin

ஓபிஎஸ் B டீமா

அதன் பின் செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ஓபிஎஸ் திமுகவின் பி டீம் என்று அதிமுக நிர்வாகிகள் கூறுகின்றனரே என்று நிருபர்கள் கேட்டதற்கு, திமுகவில் ஏ டீம், பி டீம் என்பது கிடையாது. தளபதி தலைமையில் ஒரே டீம் தான் என்று கூறினார்.

சின்னவர் என்றே அழையுங்கள்

இந்நிலையில், என் மீது கொண்ட அன்பால் சிலர் என்னை ‘மூன்றாம் கலைஞர்’, ‘இளம் தலைவர்’ என்றெல்லாம் அழைக்கிறார்கள். ஆனால், அவ்வாறு அழைக்க வேண்டாம். என்னை சின்னவர் என்றே அழைக்கலாம். என்னை சிலர் சின்னவர் என்று அழைக்கிறார்கள். அது மகிழ்ச்சிதான். இங்குள்ள பெரியவர்கள் உழைப்பின் முன் நான் சின்னவன்தான் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.