திமுக வெற்றிக்கு மோடிதான் காரணம் - உதயநிதி
நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றிக்கு 3 காரணம் என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
சென்னை கிழக்கு மாவட்ட திமுக பவள விழா நிகழ்ச்சி இன்று மாலை சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து பணியாற்றியவர்களுக்கு, பொற்கிழி, சான்றிதழ், நினைவுப்பரிசு வழங்கினார்.
வெற்றிக்கு 3 காரணங்கள்
இதன் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றிக்கு 3 காரணங்கள் இருந்தது. முதல் காரணம் பிரதமர் மோடி. சென்னையில் புயலோ, வெள்ளமோ வந்தபோது ஒருமுறை கூட எட்டிப்பார்க்காத பிரதமர், தேர்தல் பிரச்சாரத்துக்காக 8 முறை வந்தார்.
இரண்டாவது காரணம் 3 ஆண்டுகளில் முதல்வர் செய்த சாதனைகள். மூன்றாவது கட்சிக்காக உழைத்த தொண்டர்கள். திமுக தலைவராக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கூட்டணி பலம்.
அதே போல் 2026 தேர்தலிலும் திமுக வெற்றி பெரும். இதை திமுக உறுப்பினர்கள் உள்ள தைரியத்தில் கூறுவதாக முதல்வர் தெரிவித்தார். இதற்காக அனைவரும் உழைக்க வேண்டும்" என பேசியுள்ளார்.