எங்களை பார்த்தால் கோபம் வரத்தான் செய்யும் - தமிழிசைக்கு உதயநிதி பதிலடி

Udhayanidhi Stalin M K Stalin Smt Tamilisai Soundararajan R. N. Ravi
By Karthikraja Oct 19, 2024 01:30 PM GMT
Report

தமிழ்நாட்டில் என்றைக்கும் அரசியலும் ஆன்மீகமும் கலக்காது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தி மாத விழா

சென்னையில் உள்ள 'டிடி தமிழ்' தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். 

dd tamil tamil thai valthu

அப்போது பாடப்பட்ட தமிழ்தாய் வாழ்த்தில் "திராவிட நல் திருநாடு" என்ற வார்த்தையை விட்டு பாடப்பட்டது. இந்த செயலுக்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். 

ஆளுநரா? ஆரியநரா? தேசிய கீதத்தில் திராவிடத்தை விடுவாரா? கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்

ஆளுநரா? ஆரியநரா? தேசிய கீதத்தில் திராவிடத்தை விடுவாரா? கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்

ஸ்டாலின் கண்டனம்

தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்" என காட்டமட்டமாக விமர்சித்தார். 

stalin

திராவிடம் என்ற வார்த்தை உள்நோக்கத்தோடு விடுபடவில்லை, முறையான பயிற்சி இன்றிதான் பாடியுள்ளார்கள், இதை வைத்து இந்தி திணிப்பு என்று நாடகமாடினால் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியிருந்தார். மேலும், உதயநிதி கிரிவலம் சென்றுள்ளார் என பேசியிருந்தார்.

உதயநிதி பதிலடி

தமிழிசையின் பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னாள் ஆளுநர் அக்காவுக்கு கோபம் வருகிறது. 

udhayanidhi stalin

அக்கா அவர்களே, திருவண்ணாமலையில் ‘கிரி’வலம் வரும் பக்தர்களுக்கு எல்லா வசதிகளும் ‘சரி’யாக இருக்கிறதா என்று ஆய்வு தான் செய்தோம். நீங்கள் குதூகலிப்பது போல அது கிரிவலம் அல்ல – ‘சரி’ வலம்.

இந்திக்கு வக்காலத்து

ஓடாத தேரை ஓட வைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு திருப்பணிச் செய்தவர் எங்கள் முதல்வர். ‘எல்லோருக்கும் எல்லாம்’ என உழைக்கும் எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்தால், மக்களால் பல முறை நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரத்தான் செய்யும். நியாயம் தானே. 

நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும், அரசியலும் ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது. ஒன்றிய அரசின் ‘டி.டி. தமிழை’ப்போல் - அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.