உதயநிதி ஆட்சியில் மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும் - அமைச்சர் பொன்முடி பேச்சு
உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆட்சி என அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.
பொன்முடி
விழுப்புரம் மாவட்ட திருவெண்னெய்நல்லூரில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. இதில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் பழனி கலந்து கொண்டு மிதி வண்டிகளை வழங்கினர்.
அப்பொழுது பேசிய அமைச்சர் பொன்முடி, எல்லோரும் படிக்க வேண்டும் என்பது தான் திராவிடல் மாடல். படிக்கும் போதே பொது அறிவை மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும். வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் அளவுக்கு திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை இந்தியாவிலேயே வழங்கும் ஒரே முதலமைச்சர் ஸ்டாலின்தான் என பேசியுள்ளார்.
உதயநிதி
ஆட்சி மேலும், எல்லாரும் நடந்து போய் படித்த காலம் போய் இப்போது சைக்கிள் சென்று படிக்கிற காலம் வந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் நாள் கழித்தால் என்ன ஆகும்? சைக்கிள் வேணாம் எங்களுக்கு பைக் வேண்டும் என கேப்பார்கள். அது தான் காலத்தின் வளர்ச்சி. உதயநிதி தலைமையில் ஆட்சி வரும் போது நிச்சயமாக ஸ்கூட்டர் வழங்கப்படும். அவர் தான் இளைஞர்களை பற்றி தெரிந்து வைத்து கொண்டு அவர்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என பேசினார்.
ஏற்கனவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளது போல் அமைச்சர்கள் பேசி வந்த நிலையில், தற்போது மூத்த அமைச்சரான பொன்முடி உதயநிதி தலைமையில் ஆட்சி என பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.