உதயநிதியை தொடர்ந்து வானதி சீனிவாசனுக்கு வந்த சிக்கல்!

dmk bjp udhayanidhi srinivasan
By Jon Apr 07, 2021 04:49 PM GMT
Report

தமிழக மக்கள் எதிர்பார்த்து வந்த சட்டமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது. நேற்று தேர்தலில் வாக்களிப்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து சென்றார். கடந்த 2014ம் ஆண்டு அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில், வாக்குப்பதிவு நாளன்று கட்சியின் சின்னமோ, முத்திரையோ எந்தவித அடையாளத்துடனும் வாக்குச்சாவடிக்குள் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தியிருந்தது.

இதனையடுத்து, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளராகவும் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் கட்சியின் சின்னம் பொறித்த சட்டையுடன் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித்தார். சின்னம் பொறித்த சட்டை அணிந்து வந்தது சர்ச்சையாக வெடித்தது. தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அதிமுகவின் பாபு முருகவேல், உதயநிதி மீது தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

புகாரினை பெற்றுக்கொண்ட தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  

உதயநிதியை தொடர்ந்து வானதி சீனிவாசனுக்கு வந்த சிக்கல்! | Udhayanidhi Problem Vanathi Srinivasan Following

அதேபோல், கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனும் தற்போது சிக்கியுள்ளார். கோவை டாடாபாத் வாக்குச்சாவடியில் அவர் வாக்களிக்க வந்தார். அப்போது, பாஜக சின்னமான தாமரை முத்திரையை தனது புடவையில் குத்தி வந்தார்.

இது தேர்தல் விதிமீறல் என்பதால் திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளார். அதை மீறிய உதயநிதி, வானதி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.