விஜய் மாநாட்டை திமுக தடுக்கிறதா? கேள்வியால் கடுப்பான உதயநிதி - உடனே சொன்ன வார்த்தை!
விஜய் மாநாட்டை திமுக எதிர்க்கிறதா என்ற கேள்விக்கு உதயநிதி காட்டமாக பதில் அளித்துள்ளார்.
விஜய் மாநாடு
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். தொடங்கத்தில் இருந்தே 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வித்திடுவோம் என்றும் சூளுரைத்தார்.
இதையடுத்து, கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் கொள்கை விளக்க பாடலை வெளியிட்டார். அதை தொடர்ந்து, இம்மாதம் 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெகவின் முதல் அரசியல் மாநாடு நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.
உதயநிதி
மாநாட்டிற்கு அனுமதி கேட்டு விழுப்புரம் எஸ்.பியிடம் மனு அளிக்கப்பட்டது. இதற்காக 21 கேள்விகள் அடங்கிய நோட்டீஸை தவெகவிற்கு போலீசார் அனுப்பினர். அனைத்து கேள்விகளுக்கும் புஸ்ஸி ஆனந்த் நேரில் சென்று மனு மூலம் பதில் அளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், விஜய்யின் மாநாட்டிற்கு அனுமதி வழங்க தாமதப்படுத்தியதற்கு திமுகதான் காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், விஜய் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறீர்களாமே என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதனால் கடுப்பான உதயநிதி, “என்ன எதிர்ப்பு தெரிவித்தோம்..? இதுகுறித்து நீங்கள் விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். அவரிடம் கேட்க வேண்டிய கேள்வியை எல்லாம் என்னிடம் கேட்கிறீர்கள்” என்று காட்டமாக பதில் அளித்தார்.