Wednesday, Jul 23, 2025

இந்தி இல்லை - எந்த திணிப்பு தமிழ்நாட்டை நெருங்க முடியாது - அமைச்சர் உதயநிதி..!

Udhayanidhi Stalin Tamil nadu DMK Tamil
By Karthick a year ago
Report

இன்று மொழி போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் பதிவு

அந்த பதிவில், இந்தி ஆதிக்கமெனும் நெருப்பு தமிழ்நாட்டை உரசாமல் இருக்க, தங்களையே தீக்கிரையாக்கிக் கொண்ட மொழிப்போர் தியாகிகளின் நினைவாக, தமிழ்நாடெங்கும் இன்றைய தினம் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.

udhay-says-nothing-can-upress-tamil-nadu 

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்தி திணிப்பும் - அதற்கெதிரான நம் சீற்றமும், இன்றும் விமான நிலையங்களிலும் - ரயில் நிலையங்களிலும் - அஞ்சல் நிலையங்களிலும் தொடருகின்றன.

வாக்குகள் குறைந்தால்....நடவடிக்கை!! வெற்றி தான் இலக்கு..! கடுமை காட்டும் குழுவினர்..!

வாக்குகள் குறைந்தால்....நடவடிக்கை!! வெற்றி தான் இலக்கு..! கடுமை காட்டும் குழுவினர்..!

எந்த திணிப்பும்...

இன்றைக்கு இந்திக்குத் துணையாக சமஸ்கிருதத்தையும் அழைத்து வர முயற்சிக்கின்றனர்.கடைசி உடன்பிறப்பு இருக்கிற வரைக்கும் - கருப்பு, சிவப்புக் கொடி இந்த மண்ணில் பறக்கிற வரைக்கும் -

udhay-says-nothing-can-upress-tamil-nadu

அண்ணா - கலைஞர் - கழகத்தலைவர் அவர்களின் தொண்டர்கள் உலவுகிற வரைக்கும், இந்தி திணிப்பு மட்டுமல்ல எந்த திணிப்பும் தமிழ்நாட்டை நெருங்க முடியாது. #மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்! என குறிப்பிட்டுள்ளார்.