இப்படி நடந்தால் மட்டுமே வருவார்!! நழுவுகிறாரா உத்தவ் தாக்ரே - இந்தியா கூட்டணிக்கு முதல் அடி?
இந்தியா கூட்டணி கூட்டத்தில் உத்தவ் தாக்ரே பங்கேற்கவில்லை என்ற செய்தி தேசிய அளவில் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது.
உத்தவ் தாக்ரே
சிவசேனா கட்சி உடைந்து, ஏக்நாத் ஷிண்டே முழுமையாக கட்சி, சின்னம், ஆட்சி என அனைத்தையும் கைப்பற்றினார். தந்தை உருவாக்கிய கட்சியை பறிகொடுத்த உத்தவ் தாக்ரே சிவசேனா (UBT) என கட்சி துவங்கி மக்களவை தேர்தலை இந்தியா கூட்டணியில் சந்தித்தார்.
அக்கட்சிக்கு மக்கள் நல்ல வரவேற்பை அளித்து 9 இடங்களை அளித்துள்ளனர். எந்த கட்சிக்கும் பெருபான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கணக்குகள் தேசிய அளவில் துவங்கியுள்ளது.
பங்கேற்கவில்லை
தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் நடந்து வரும் நிலையில், மாலையில் இந்தியா கூட்டணி கூட்டம் நடைபெறத்தவுள்ளது. பெரிய திருப்பமாக இதில் உத்தவ் தாக்ரே பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது.
சிவசேனா (UBT) தலைவர்கள் சஞ்சய் ராவத், அனில் தேசாய் மற்றும் அரவிந்த் சாவந்த் ஆகியோர் உத்தவ் சார்பில் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். உத்தவ், மத்தியில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதில் ஆர்வமாக உள்ளதாகவும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உட்பட பல எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சிவசேனா (யுபிடி) தலைவர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆட்சி அமைப்பது தொடர்பாக சாதகமான நிலையோ அல்லது கணிசமான வளர்ச்சி ஏற்பட்டால் மட்டுமே உத்தவ் டெல்லி செல்வார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முக்கிய தலைவர் வராதது காட்சிகளுக்கு சற்று தோய்வையே தரும்.