பிரதமர் மோடியை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி - என்ன காரணம்?
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிரதமரை சந்திக்க உள்ளார்.
அமைச்சர் உதயநிதி
தமிழகத்தில் வரும் 19 ந் தேதி முதல் கோலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டி இளைஞர்களுக்கான தேசிய போட்டியாக நடத்தப்படுகிறது.
இப்போட்டிகள் சென்னை,மதுரை,திருச்சி,கோவை ஆகிய 4 மாவட்டங்களில் ஜனவரி 19 முதல் 31 வரை நடைபெற உள்ளது. நிறைவு விழா சென்னையில் நடத்தப்பட உள்ளது.
பிரதமருடன் சந்திப்பு
இப்போட்டிக்கான நிறைவு விழாவில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்க அழைப்பிதல் வழங்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை டெல்லி செல்கின்றார். நாளை காலை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்க உள்ளார்.
இவருடன் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, மேக்நாத் ரெட்டி ஆகியோரும் செல்கிறார்கள். அதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூரையும் சந்தித்து அழைப்பிதழை வழங்க உள்ளார்.