அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு - ஆங்கில டிவி ஆசிரியர் விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவு செய்த ஆங்கில தொலைக்காட்சி ஆசிரியர் விசாரணைக்கு ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவதூறு கருத்து
கடந்த சில நாட்களுக்கு முன் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார்.
அவர் பேசியது குறித்து பிரபல ஆங்கில தொலைக்காட்சியின் ஆலோசனை ஆசிரியர் அபிஜித் மஜும்தார் கட்டுரை எழுதியிருந்தார். அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவு செய்ததாக சென்னை சைபர் கிராம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
நீதிமன்றம் உத்தரவு
மேலும், இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அபிஜித் மஜும்தார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நவம்பர் 8ம் தேதி, சென்னை சைபர் கிரைம் போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராகும்படி அபிஜித் மஜும்தாருக்கு உத்தரவிட்டுள்ளது.