அமைச்சராகும் உதயநிதி: மாறப்போகும் இலாகா - பரபர தகவல்!
தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின்
திமுகவின் இளைஞரணி செயலாளராக 2-வது முறையாக மீண்டும் உதயநிதி ஸ்டாலின்(45) நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விரைவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையை அவருக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரிவாக்கம்
35 அமைச்சர்கள் நியமிக்கப்படக் கூடிய நிலையில், தற்போது முதலமைச்சர் உள்பட 34 அமைச்சர்கள் உள்ளனர். எனவே மீதமுள்ள ஒரு இடம் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட உள்ளது. மூத்த அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட உள்ளது.
அதன்படி, 14-ந் தேதியன்று அவர் அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.