விமர்சனத்திற்கு பணியின் மூலம் பதிலளிப்பேன் - உதயநிதி ஸ்டாலின்
துணை முதலமைச்சர் என்பது பதவி அல்ல பொறுப்பு என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உதயநிதி
இன்று துணை முதல்வராக பதவியேற்க உள்ள உதயநிதி ஸ்டாலின், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
இதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், துணை முதலமைச்சர்’ என்பது பதவி அல்ல பொறுப்பு, அதை உணர்ந்து இன்னும் அதிகமாக மக்களுக்கு உழைக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார்.
விமர்சனங்களுக்கான பதில்
என்னை வாழ்த்துபவர்களுக்கும், விமர்சிப்பவர்களுக்கும் நன்றி. வாழ்த்துகளை உள்வாங்கிக் கொள்வது போல, விமர்சனங்களையும் உள்வாங்கி தவறுகள் இருந்தால் திருத்திக் கொண்டு, என்னுடைய பணிகளை இன்னும் சிறப்பாக செய்வேன்.
திமுக இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்ட போதும் விமர்சனங்கள் வந்தது, என்னுடைய பணிகள் மூலமாக மட்டும் தான் அதை நியாயப்படுத்த முடியும். எம்.எல்.ஏ, அமைச்சர் பொறுப்பு கொடுத்த போதும் விமர்சனங்கள் வந்தது.
விமர்சனங்கள் வரத்தான் செய்யும், எல்லா விமர்சனங்களையும் வரவேற்கிறேன், உள்வாங்கிக் கொள்கிறேன். விமர்சனங்களுக்கான பதிலை என்னுடைய பணிகள் மூலம் சிறப்பாக அமைத்துக் கொள்வேன்” என தெரிவித்துள்ளார்.