அனைத்துலக முருகன் மாநாடு ஆன்மிக மாநாடு கிடையாது - உதயநிதி ஸ்டாலின்
இந்துசமய அறநிலையத்துறையின் பொற்காலம் திமுக ஆட்சி என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
அனைத்துலக முருகன் மாநாடு
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, ஆதீனங்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
அதில் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, "இந்துசமய அறநிலையத்துறையின் பொற்காலம் என்றால் அது திமுக ஆட்சில்தான். 3 ஆண்டுகளில் 1,400-க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. 6 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. முத்தமிழ் முருகன் மாநாடு ஆன்மிக மாநாடாக மட்டுமல்லாமல், தமிழர் பண்பாட்டு மாநாடாகவும் நடைபெற்றுள்ளது.
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
திராவிடம் யாரையும் ஒதுக்காது. எல்லோரையும் இணைக்கும் என்பதற்கு உதாரணம்தான் அனைத்து சாதியினரையும், மகளிரையும் அர்ச்சகராக்கியது. சேகர் பாபுவை செயல் பாபு என்று முதலமைச்சர் சொல்வது இந்த மாநாடு மூலம் உண்மையாகி விட்டது" என பேசியுள்ளார்.