தவெக அதிமுக கூட்டணி குறித்த முடிவு எப்பொழுது? எடப்பாடி பழனிசாமி
பாஜக இரட்டை வேடம் போடுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக கட்சி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பில் அவர் பேசியதாவது, கலைஞர் நாணய வெளியீட்டு விழா மாநில அரசால் நடத்தப்படுகின்ற விழா அல்ல, மத்திய அரசால் நடத்தப்படுகின்ற விழா என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா
ஆனால் எனக்கு வந்த அந்த அழைப்பிதழில் மாநில அரசினுடைய இலச்சினை தான் பொறிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் தலைமைச் செயலாளர் தான் எனக்கு அழைப்பிதழைக் கொடுத்திருக்கிறார். அவருடைய பெயர் தான் அழைப்பிதழில் இடம் பெற்றிருக்கிறது. ஆகவே இது மாநில அரசு நடத்துகின்ற விழா.
ஏதோ மத்தியிலே இருந்து ஆட்சியாளர்கள் வந்து இந்த நாணயத்தை வெளியிட்டால் தான் புகழ் கிடைக்கும் என்று தோரணையில் பேசியிருக்கிறார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வந்த பொழுது சிறப்புச் செய்யும் விதமாக நாங்களும் நாணயம் வெளியிட்டோம்.
அதிமுக தவெக கூட்டணி
அப்பொழுது முதலமைச்சர் என்ற முறையில் நானே வெளியிட்டேன். அப்பொழுது அதிமுக நன்றாக இருந்தது. இப்பொழுது உறவையும் முறிக்கும் பொழுது அதிமுக கெட்டதாக தெரிகிறது. இதுதான் பாஜகவினுடைய இரட்டை வேடம் என பேசியுள்ளார்.
அதிமுக தலைவர்களை விஜய் பயன்படுவது பெருமையாக உள்ளது. அதிமுக தலைவர்களை பயன்படுத்தினால் தான் அரசியல் செய்ய முடியும் என அனைவரும் தெரிந்து வைத்துள்ளனர். தேர்தல் நேரத்தில் அதிமுக தவெக கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளார்.