சென்னை விமான நிலையத்தில்.. இனி டீ ரூ.10, சமோசா ரூ.20 - விவரம் இதோ..

Chennai Government Of India
By Sumathi Feb 27, 2025 02:30 PM GMT
Report

சென்னை விமான நிலையத்தில் மலிவு விலை கஃபே திறக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம்

நாடு முழுவதும் சர்வதேச விமான நிலையங்களில், தண்ணீர் முதல் உணவு வரை அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதன்படி, தண்ணீர் பாட்டல் ரூ. 125, இட்லி ரூ. 250, பிரியாணி ரூ. 450 என விற்பனை செய்யப்படுகிறது.

udan yatri cafe

இந்நிலையில், குறைந்த விலை டீ, காபி, தண்ணீர் மற்றும் திண்பண்டங்களை விற்பனை செய்யும் 'உடான் யாத்ரி கஃபே' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. முன்னதாக, கொல்கத்தா விமான நிலையத்தில் முதல் கஃபே திறக்கப்பட்டது.

பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு வாட்ஸ்அப் குரூப் - ரயில்வேயின் புதிய திட்டம்

பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு வாட்ஸ்அப் குரூப் - ரயில்வேயின் புதிய திட்டம்

மலிவு விலை கஃபே

தொடர்ந்து, சென்னை விமான நிலையத்திலும் இன்று திறக்கப்பட்டுள்ளது. இதனை மாற்றுத்திறனாளிகள் நடத்துகின்றனர். இந்த கஃபேவில் தண்ணீர் ரூ.10, டீ ரூ. 10, காபி ரூ. 20, சமோசா, வடை உள்ளிட்டவை ரூ. 20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

chennai airport

இந்த கஃபேவைத் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு திறந்துவைத்தார். பின் பேசிய அவர், இந்த திட்டமானது நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.