இந்த 9 நாடுகளுக்கு விசா இல்லை - ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு!
யுஏஇ விசா தடையை அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக H1B விசாவுக்கான விண்ணப்ப கட்டணத்தை உயர்த்தினார். இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது புதிய 2026 விசா கொள்கையின் பகுதியாக,
9 நாடுகளின் குடிமக்கள் மீது சுற்றுலா மற்றும் வேலை விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
விசா தடை
ஆப்கானிஸ்தான், லிபியா, யெமன், சோமாலியா, லெபனான், பங்களாதேஷ், கேமரூன், சூடான், உகாண்டா நாடுகளின் குடிமக்கள் இனி யுஏஇக்கு புதிய சுற்றுலா விசா அல்லது வேலை அனுமதிப்பத்திரம் பெற முடியாது.
ஏற்கனவே செல்லுபடியாகிய விசா வைத்திருப்பவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு சிக்கல்கள், தீவிரவாத அச்சங்கள்,
தூதரக உறவுகளில் ஏற்பட்ட பதற்றம், மற்றும் தொற்றுநோய் தொடர்பான பயணக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.