வரலாற்று முடிவு; கருக்கலைப்பு செய்ய அனுமதி - அறிவித்தது இந்த நாடா?

Abortion United Arab Emirates
By Sumathi Jun 22, 2024 05:25 AM GMT
Report

கருக்கலைப்பு அனுமதி அளிப்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

கருக்கலைப்பு 

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) கருக்கலைப்பு செய்வது சட்டப்படி குற்றம். இந்நிலையில், கேபினட் அங்கு கருக்கலைப்பு அனுமதி அளிப்பது தொடர்பான தீர்மானத்த நிறைவேற்றியுள்ளது.

வரலாற்று முடிவு; கருக்கலைப்பு செய்ய அனுமதி - அறிவித்தது இந்த நாடா? | Uae Legalize Abortion Details

இந்த முடிவு பெண்களின் சுகாதாரத்தை உறுதி செய்யும். கர்ப்பமானது ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக, அவரது சம்மதமின்றி அல்லது போதுமான விருப்பமின்றி பாலியல் உறவின் விளைவாக இருந்தால் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படும்.

சட்டமான கருக்கலைப்பு உரிமை; அங்கீகரித்த முதல் நாடு - எது தெரியுமா?

சட்டமான கருக்கலைப்பு உரிமை; அங்கீகரித்த முதல் நாடு - எது தெரியுமா?

அரபு அமீரகம் அனுமதி

கர்ப்பத்திற்கு காரணமானவர் அந்த பெண்ணின் திருமணத்திற்கு தகுதியற்ற உறவினர்களில் ஒருவராக இருந்தாலும் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படும். கருத்தரித்து 120 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

united arab emirates

கருக்கலைப்பு பெண்னின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். ஏனெ்னறால் இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இந்த தீர்மானம் தொடர்பான அரசானை வெளியிட்ட பின் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.