4 மாத கர்ப்பிணியாக மருத்துவமனை சென்ற பெண் - மொழி புரியாமல் கருக்கலைப்பு செய்த மருத்துவர்கள்
மொழிப் பிரச்னையால் மருத்துவமனைக்கு சென்ற 4 மாத கர்ப்பிணிப் பெண்ணிற்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மொழி பிரச்சனை
மொழி என்பது அத்தியாவசியமான ஒன்றாக இருக்கின்றது. உலகம் எவ்வளவு நவீனமயணமானாலும், மற்றொரு சொல்வதை புரிந்து கொள்ள நமக்கு நிச்சயம் அவருக்கு கணிசம் அவர் பேசுவது இந்த மொழி தான் என்றாவது நமக்கு தெரிவது அவசியம்.
பல்வேறு இடங்களில் மொழி புரியாமல் நடைபெறும் சம்பவங்கள் சில காமெடியில் முடிந்துள்ளதை நாம் கடந்து வந்திருக்கிறோம். ஆனால், அதே மொழி புரியாத காரணத்தால் கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கருக்கலைப்பு
கடந்த மார்ச் 25ஆம் தேதி செக் குடியரசு நாட்டின் பிராக் என்ற நகரில் அமைந்துள்ள புலோவ்கா பல்கலைக்கழக மருத்துவமனைக்கு, 4 மாத கர்ப்பிணி வெளிநாட்டு பெண் ஒருவர், பரிசோதனைக்காகச் சென்றுள்ளார்.
பரிசோதனை குறித்து அவர் வினவ, அவர் பேசிய மொழியை புரிந்து கொள்ள முடியாத மருத்துவமனை ஊழியர்கள், அப்பெண்ணிற்கு கருக்கலைப்பு செய்யவேண்டும் என தவறுதலாக புரிந்து கொண்டு, அப்பெண்ணிற்கு கருக்கலைப்புக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
வார்டில் இருந்த மருத்துவர்களும் முறையான புரிதல் இல்லாமல் அப்பெண்ணிடம் உறுதி செய்து கொள்ளாமல், அவர் கருக்கலைப்பு செய்துள்ளனர். மொழிப்பிரச்னை காரணமாக தவறான சிகிச்சையளித்து பெண்ணிற்கு கருக்கலைப்பு செய்த மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர் மற்றும் மயக்க மருந்து நிபுணர் அனைவருமே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளநார்.