3ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக - மு.க.ஸ்டாலின் அரசு செய்தது என்ன?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
திமுக ஆட்சி
ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாளே, கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், ஆவின் பால் லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைப்பு உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
தொடர்ந்து, 210க்கும் மேற்பட்ட திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி உள்ளது. 4 ஆயிரத்து 805 கோடி ரூபாய் மதிப்பில் நகைக் கடன் தள்ளுபடி, இல்லம் தேடி கல்வித்திட்டம், நான் முதல்வன், எண்ணும் எழுத்தும் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்களில் 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள கடன் ரத்து, பெண் ஓதுவார்களை பணியில் அமர்த்தியது,
ஸ்டாலின் பெருமிதம்
மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் ஆகியவை அடங்கும். இந்நிலையில், நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் தமிழ்நாட்டில் 8 கோடி மக்களுக்கு ஏதாவது ஒரு நன்மை கிடைத்துள்ளது. பெண்கள் குழந்தைகள், பள்ளி மாணவர்கள்ம் கல்லூரி மாணவிகள், விவசாயிகள் என அனைவருக்கும் பலன் கிடைத்துள்ளது.
கீழ்நிலையில் உள்ள மக்களை கை தூக்கிவிடுகிற அரசுதான் எங்களது அரசு என பேசிய முதலமைச்சர் பெரியார், அண்ணா, கருணாநிதியை என் நெஞ்சில் ஏற்றி பணியாற்றி வருகிறேன். என்னால் முடிந்த அளவிற்கு ஓய்வின்றி சக்திக்கு மீறி பணியாற்றி வருகிறேன்.
தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்ல என்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளேன் என்றும் திமுகவுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என அனைவருக்கும் நன்மை செய்து வருகிறேன். கடந்த ஆட்சியில் சீரழிந்த அரசு நிர்வாகத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,
இருண்ட தமிழ்நாட்டில் விடியல் உண்டாக்கப்பட்டு உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். மக்களின் ஆதரவோடு 5 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும் திமுக ஆட்சி தொடரும் என தெரிவித்துள்ளார்.