உலகக் கோப்பை வென்ற 2 அணிகள்; 2025 சாம்பியன்ஸ் டிராபியில் இடமில்லை - எப்படி?
உலகக் கோப்பை வென்ற 2 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கவில்லை.
சாம்பியன்ஸ் டிராபி
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது. இதில், இரண்டு உலகக் கோப்பை வென்ற அணிகளுக்கு இடம் அளிக்கப்படவில்லை.
முன்னதாக லீக் சுற்றில் முதல் எட்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு நேரடியாக தகுதி பெறும் என்ற நிலை இருந்தது. அந்த வகையில் புள்ளிப் பட்டியலில் முதல் எட்டு இடங்களை பெற்ற
இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க தகுதி பெற்றன.
2 அணிகளுக்கு இடமில்லை
இதற்கு முன் உலகக் கோப்பை வென்று இருந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகள் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னேறவில்லை. ஒருநாள் போட்டி தரவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் அணி பின்தங்கி இருந்ததால் 2023 உலகக் கோப்பைக்கு தகுதி பெறவில்லை.
அதன் பின்னர் உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடியது. அதிலும் தோல்வி அடைந்ததை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியால் 2023 உலகக் கோப்பையில் ஆட முடியவில்லை.
அதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இடம்பெறவில்லை. 1996 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணி இந்த முறை 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறவில்லை.